/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குறுகலான சுரங்கவழி பாதையால் பொதுமக்கள், பக்தர்கள் அவதி
/
குறுகலான சுரங்கவழி பாதையால் பொதுமக்கள், பக்தர்கள் அவதி
குறுகலான சுரங்கவழி பாதையால் பொதுமக்கள், பக்தர்கள் அவதி
குறுகலான சுரங்கவழி பாதையால் பொதுமக்கள், பக்தர்கள் அவதி
ADDED : அக் 27, 2024 01:21 AM
குறுகலான சுரங்கவழி பாதையால் பொதுமக்கள், பக்தர்கள் அவதி
மொரப்பூர், அக். 27-
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நடுப்பட்டியில், சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை நாட்களில், 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்நிலையில், மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 1.5 கி.மீ., துாரமுள்ள கோவிலுக்கு செல்லும் வழியில், ஜோலார்பேட்டை - சேலம் ரயில் வழித்தடம் உள்ளது. இதை கடந்து செல்ல, சுரங்கவழி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் மிகவும் குறுகலாகவும், தாழ்வாகவும் உள்ளதால், இதன் வழியே செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் சுரங்க வழிப்பாதையில் தண்ணீர் தேங்குவதால், நடந்து செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, சுரங்க வழி பாலத்தை அகலப்படுத்த, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.