ADDED : ஆக 31, 2026 02:42 AM
அ நிறம் | அளவு
அரூர்: . தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்-டது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்-களின் நலன் கருதி கட்டப்பட்ட இந்த இந்த நிழற்கூடத்தில், எப்-போதும் மக்கள் கூட்டம் இருக்கும். கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நிழற்கூடம் சேதமடைந்தது. இதையடுத்து, பொக்லைன் வாகனம் மூலம், நிழற்கூடம் அகற்றப்பட்டது.
அதன் பின்னர், நிழற்கூடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. நிழற்கூடம் இல்லாததால், பஸ்சுக்கு காத்திருக்கும் பொதுமக்களும், நோயாளிகளும், வெயில் மற்றும் மழையின் போது அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அரூர் அரசு மருத்து-வமனை முன், நிழற்கூடம் கட்ட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
