ADDED : ஆக 31, 2026 02:41 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், பஸ் ஸ்டாண்ட், பாட்சாபேட்டை, நான்குரோடு, திரு.வி.க., நகர், என்.என்.மகால், மொரப்பூர் சாலை உள்ளிட்ட இடங்களில் சிறிதளவு மழை பெய்தால் கூட சாலையில் மழை நீர் தேங்குகிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வரு-கின்றனர். எனவே, சாலையில் தேங்கும் மழை நீர் வெளியேறும் வகையில், வடிநீர் கால்வாய்களை அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
