/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 06, 2024 07:18 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த புலிக்கரை பஞ்.,க்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதில், சில ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் வந்தது.பல ஆண்டுகளுக்கு முன், இத்தொட்டியின் மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதால் தண்ணீர் வருவதில்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவியர் தண்ணீன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.போர்வெல் ஆழ்துளை குழாய் நீரின்றி வறண்டுள்ளது. எனவே, இந்த ஆழ்துளை குழாயை ஆழப்படுத்தியும், இத்தொட்டியின் மின்மோட்டாரையும் சீரமைக்கவும் வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.