ADDED : ஜன 29, 2025 07:11 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீரைப்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.
பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர், 4 கி.மீ., துாரம் நடந்து சென்று வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் கீரைப்பட்டிக்கு பஸ் இயக்க, மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
