/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிராம பஞ்சாயத்துக்கள் பிரிப்பு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
/
கிராம பஞ்சாயத்துக்கள் பிரிப்பு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
கிராம பஞ்சாயத்துக்கள் பிரிப்பு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
கிராம பஞ்சாயத்துக்கள் பிரிப்பு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
ADDED : டிச 23, 2025 06:04 AM
தர்மபுரி: நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள மானியதஹள்ளி பஞ்., நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, மாவட்ட கலெக்டர் சதீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்த, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஹள்ளி கிராம பஞ்., 18 குக்கிராமங்களை உள்ளடக்கியது. அதிக எண்ணிகையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை பரப்பளவு மற்றும் வீடுகளை கொண்ட மானியதஹள்ளி கிராம பஞ்.,ஐ இரண்டு கிராம பஞ்.,களாக பிரித்து, மறுசீரமைப்பு செய்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, டிச., 5 அன்று ஆணை வெளியிடப்பட்டது. அதை டிச்., 6ல் தர்மபுரி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டது.
மானியதள்ளி பஞ்.,ஐ இரண்டாக பிரித்து, மானிய தள்ளி, கீழ்ஈசல்பட்டி என, 2 புதிய கிராம பஞ்.,கள் உருவாக்கப்பட்டுள்ளன. மானியதஹள்ளி பஞ்.,ல் மானியதஹள்ளி, அஜ்ஜிப்பட்டி, கடத்திக்குட்டை, கொம்புகுட்டை, சந்தநுாரான்கொட்டாய், பொடரான் கொட்டாய், மாணிக்கம்புதுார், கருப்புநாயக்கன்பட்டி, மேற்கத்தியான் கொட்டாய், கடுக்கப்பட்டியான் கொட்டாய் ஆகிய, 10 குக்கிராமங்களை உள்ளடக்கியது. கீழ் ஈசல்பட்டி கிராம பஞ்.,ல் கீழ் ஈசல்பட்டி, மேல் ஈசல்பட்டி, மேல்பூரிக்கல், கீழ்பூரிக்கல், மலையப்பநகர், சேசம்பட்டியான் கொட்டாய், பரிகம், குரும்பட்டியான் கொட்டாய் ஆகிய, 8 குக்கிராமங்களை உள்ளடக்கியது.
இது தொடர்பாக, பொதுமக்கள் தங்களது கருத்துக்களை டிச., 26க்குள் மாவட்ட கலெக்டர், தர்மபுரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

