/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
/
குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
ADDED : நவ 21, 2024 01:41 AM
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 21---
கடத்துார் ஒன்றியம்
ஓசஹள்ளி ஊராட்சியில், புதுப்பட்டி உள்ளிட்ட, 7 கிராமங்கள் உள்ளன. இதில் புதுப்பட்டி காலனியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 23 லட்சம் ரூபாய் மதிப்பில் 30,000 லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி புதிதாக கட்டப்பட்டது.
தொட்டிக்கு குடிநீர் ஏற்ற போடப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் குறைவாக வருகிறது. இதனால், போதியளவு தண்ணீரின்றி, மக்கள் அவதிப்பட்டு
வருகின்றனர். நேற்று மாலை அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு, காலிகுடங்களுடன் அக்கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பேச்சுவார்த்தைக்கு பின், போராட்டம் கைவிடப்பட்டது.

