/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுகாதார சீர்கேடால் பொதுமக்கள் அவதி
/
சுகாதார சீர்கேடால் பொதுமக்கள் அவதி
ADDED : டிச 13, 2024 01:17 AM
சுகாதார சீர்கேடால் பொதுமக்கள் அவதி
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 13---
.கடத்துார் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் பஸ் ஸ்டாண்டில் இருந்து புதுரெட்டியூர் செல்லும் சாலையில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கவில்லை. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. பஸ் ஸ்டாண்டிலுள்ள கழிவறையில் இருந்தும் கழிவுகள் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சியில், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சாக்கடை கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.