/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புரட்டாசி 4ம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
/
புரட்டாசி 4ம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 4ம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 4ம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : அக் 13, 2024 08:31 AM
தர்மபுரி: புரட்டாசி மாத ௪ம் சனிக்கிழமையையொட்டி, தர்மபுரியிலுள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில், சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
புரட்டாசி மாதத்தின், 4வது சனிக்கிழமையையொட்டி, தர்மபுரி அடுத்த மூக்கனுார் ஆதிமூல
பெருமாள் சுவாமி கோவிலில் சுவா-மிக்கு, பலவகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள்
நடந்தன. பின், சுவாமிக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம்
செய்தனர். இதேபோல், கடைவீதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோவில், செட்டிக்கரை,
ஸ்ரீபெ-ருமாள் கோவில், சோகத்துார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில், பழைய
தர்மபுரி வரதகுப்பம் பெருமாள் கோவில், மணியம்பாடி பெருமாள் கோவில் உட்பட, தர்மபுரியில்
உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.* அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான
பக்தர்கள் சுவாமியை வழிபட்-டனர். அதே போல், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ
பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ட ரமண பெருமாள் கோவில்
மற்றும் மருதிப்பட்டி, பெத்துார், கொங்கவேம்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள்
கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று விஜயதசமி மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை-யொட்டி, அரூரில் பூ மாலைகளின் விலை
அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அரூர் கடைவீதியில், பூக்கள் மற்றும்
பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால், அதன் விற்பனை ஜோராக நடந்தது.