/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று மூடல்
/
புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று மூடல்
புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று மூடல்
புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று மூடல்
ADDED : டிச 06, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம், கடத்துார் -- அரூர் பகுதிக்கு செல்லும் வழியிலுள்ள புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில், இரு ரயில் பாதைகளுக்கு இடையே, காங்கிரீட் தரைத்தளம் சீராக இல்லாமல் மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதற்காக இன்று காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை கேட் மூடப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எச்சரிக்கை பலகை, ரயில்வே கேட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக வரும் வாகனங்கள், பொதுமக்கள் வேறு சாலையில் செல்ல ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.