/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'வி.சி., மது ஒழிப்பு மாநாடு குறித்து பேச ஒன்றுமில்லை''
/
'வி.சி., மது ஒழிப்பு மாநாடு குறித்து பேச ஒன்றுமில்லை''
'வி.சி., மது ஒழிப்பு மாநாடு குறித்து பேச ஒன்றுமில்லை''
'வி.சி., மது ஒழிப்பு மாநாடு குறித்து பேச ஒன்றுமில்லை''
ADDED : செப் 18, 2024 07:10 AM
தர்மபுரி: ''வி.சி., கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து பேச ஒன்றுமில்லை,'' என, பா.ம.க., சவுமியா கூறினார்.
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த, 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தர்மபுரி, வன்னியர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற அவர், தியாகி களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்திய பின், நிருபர்களிடம் கூறியதாவது:
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, 1980-களில் இல்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார். இதனால், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த, 108 ஜாதிகளில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். அதற்கு அடித்தளமாக அமைந்தது செப்., 17-ல் நடந்த போராட்டமும், அதில் இறந்த, 21 பேரின் தியாகம் தான். இட ஒதுக்கீடு பெற்று தராமல் இருந்திருந்தால், எம்.பி.சி.,- என்ற பிரிவு, இன்று இருந்திருக்காது.
தற்போது, 10.5 சதவீதம் வன்னியர் இட ஒதுக்கீட்டை நியாயமாக கேட்டு பெறவே, பா.ம.க., முயற்சிக்கிறது. ஆனால், போராடி தான் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. மருத்துவர் ராமதாஸ் சொன்னால் போதும், போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.
மது ஒழிப்பு குறித்து, பல ஆண்டுகளாக ராமதாஸ் பேசி வருகிறார். அதே போல, அன்புமணியும் மது ஒழிப்பை வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தில், ஒரு மதுக்கடைக்கு,
5 சந்து கடைகள் என்ற விகிதத்தில் உள்ளது. மது ஒழிப்புக்காக போராடிய, குமரிஅனந்தனை வி.சி., நடத்தும்
மாநாட்டிற்கு அழைக்கவில்லை. இதனால், அவர்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து பேச ஒன்றுமில்லை. மேலும், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தர்மபுரியில் அக்.,4 ல் திட்டமிட்டபடி, கடையடைப்பு போராட்டம் நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.