ADDED : ஜூலை 19, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி :பொம்மிடி அடுத்த ஜாலியூரில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தொடங்கி வைத்தார். முகாமில் பசுக்களுக்கு கோமாரி தடுப்பூசி, கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது. சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடைகளை பராமரிக்கும் விவசாயிக்கு பரிசு வழங்கப்பட்டது.
கால்நடை வளர்ப்போருக்கு தீவன விதை இலவசமாக வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரூர் கோட்ட கால்நடை உதவி இயக்குனர் கனகசபை, கால்நடை மருத்துவர்கள் திருநாவுக்கரசு, சக்திவேல், குந்தவை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.