/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ராகி தோட்டம், குழாய்களை சேதப்படுத்திய யானைகள்
/
ராகி தோட்டம், குழாய்களை சேதப்படுத்திய யானைகள்
ADDED : நவ 11, 2024 07:21 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகம், நொகனுார் காப்புக்காட்டில் பல்வேறு குழுக்களாக, 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 5க்கும் மேற்பட்ட யானைகள், ஆலஹள்ளி கிராமத்திற்குள் புகுந்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி மாதன் என்பவரது மூன்றரை ஏக்கர் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து, ராகி பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. மேலும், அங்கிருந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தும் குழாய்களை சேதப்படுத்தின. நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயி மாதன், யானைகளால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வனத்துறை உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நொகனுார் வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளால், விவசாய பயிர்கள் தொடர்ந்து சேதமாகி வருகிறது. அதனால் யானைகளை கர்நாடகா மாநிலத்திற்கு விரட்ட, கோரிக்கை எழுந்துள்ளது.