தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்

ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்

ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்


ADDED : ஜன 06, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரியில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்த மத்திய அரசை கண்டித்து, ஏ.ஐ.ஒய்.எப்., சார்பில், நேற்று தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் நவீன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

தமிழகத்தில் உள்ள ரயில்வே துறை, வங்கி, அஞ்சல், தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலக காலிப்பணியிடங்களை, தமிழக இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

பாயின்ட்ஸ்மேன் பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, பணி நியமனம் செய்ய வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்.

ஒப்பந்த நியமனம் மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us