ADDED : நவ 27, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், நவ.
27-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, பகல், 12:00 மணி முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. அதேபோல், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

