ADDED : நவ 13, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், 250-க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதில், நகராட்சி சேர்மன் லட்சுமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் செந்தில்குமார், நித்யானந்தம், நிர்வாக பொறியாளர்கள் திவ்யா, நிரஞ்சினி, நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

