ADDED : அக் 24, 2026 04:16 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 21ம் தேதி இரவு பரவலாக கனமழை பெய்தது.
இதனால், தர்மபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டி அரசு காது கேளாதோர் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல், இலக்கியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இது குறித்த செய்தி நமது நாளிதழில் வெளியானது. இதையடுத்து, நேற்று தர்மபுரி பி.டி.ஓ., சர்ஹோத்தமன் பள்-ளியில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீரை வெளி-யேற்ற இலக்கியம்பட்டி பஞ்., செயலாளர் சரவ-ணனுக்கு உத்தரவிட்டார். இதில், பள்ளியில் தேங்கிய மழைநீர் பொக்லைன் உதவியுடன் வெளியேற்றப்பட்டது.
