ADDED : ஆக 21, 2025 01:53 AM
ஓசூர்,
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. ஓசூர் எம்.ஜி., ரோட்டிலுள்ள காந்தி சிலை மற்றும் ராஜிவ் உருவ படத்திற்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஓசூர், அரசு தலைமை மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, காங்., நிர்வாகி மைஜா அக்பர் ஏற்பாட்டில், பழங்கள், பிரட் வழங்கப்பட்டன.
* கிருஷ்ணகிரியில், நகர காங்., கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், தொகுதி சீரமைப்பு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசு துரைராஜ் ஆகியோர், ராஜிவ் படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
* ஊத்தங்கரையில், காங்., கட்சியின் சார்பில், கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிக்கு, காங்., மத்திய வட்டார தலைவர் திருமால் தலைமை வகித்தார். நகர தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் முன், பாலக்கோடு காங்., நகர தலைவர் கணேசன்
தலைமையில் ராஜிவ் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

