/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டாசில் கைது
/
ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டாசில் கைது
ADDED : ஜூன் 07, 2024 12:19 AM
தர்மபுரி : தர்மபுரியில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.தர்மபுரி அடுத்த சின்னாங்குப்பம் பகுதியில், கடந்த மே, 25ல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அசோக் லேலண்ட் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 19 ஆயிரத்து, 470 கிலோ ரேஷன் பச்சை மற்றும் குருணை அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இது தொடர்பாக ரகு, 34 என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது.பின், சேலம் சரக டி.எஸ்.பி., விஜயகுமார், மாவட்ட கலெக்டர் சாந்திக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதை ஏற்ற அவர், தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சின்னாங்குப்பத்தை சேர்ந்த ரகுவை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.