/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 09, 2025 02:12 AM
தர்மபுரி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி, அனைத்து பணியாளர்கள் சங்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. மாநில முன்னாள் தலைவர் மேசப்பன் தலைமை வகித்தார்.
தர்மபுரி மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் வரும், 14- அன்று முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், இந்த போராட்டத்தில், சேலம் மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கி மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள், 100 சதவீதம் கலந்து கொள்வதென, தீர்மானம் நிறைவேற்றினர்.