/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரேஷன் பணியாளர்கள் தொடர் போராட்டம்
/
ரேஷன் பணியாளர்கள் தொடர் போராட்டம்
ADDED : அக் 23, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் பணியாளர்கள்
தொடர் போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 23---
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் உள்ள, 184 ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று இரண்டாவது நாளாக, பாப்பிரெட்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன், வட்டார செயலாளர்
சத்தியமூர்த்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட போராட்டக் குழு செயலாளர் ராமராஜ், போராட்ட குழு தலைவர் ஸ்டாலின், வட்டார பொருளாளர் ஆசைமணி உள்பட நிர்வாகிகள் முன்னிலையில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதனால், பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.