ADDED : ஜூலை 31, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் வட்டத்தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. ஓய்வுபெற்ற தமிழாசிரியர் மகாலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நுாலகர் முத்துராணி வரவேற்றார்.
கூட்டத்தில், நுாலகத்தை காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை இயங்கும்படி, முழு நேரமாக தரம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை வைப்பது என்றும், பள்ளி மாணவர்கள் அனைவரையும், நுாலக உறுப்பினர்களாக சேர்ப்பது, புரவலர் எண்ணிக்கை அதிகப்படுத்துவது என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.