/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாணியாறு அணையை சுற்றுலா தலமாக்க ரூ.13.50 கோடியில் அரசுக்கு பரிந்துரை
/
வாணியாறு அணையை சுற்றுலா தலமாக்க ரூ.13.50 கோடியில் அரசுக்கு பரிந்துரை
வாணியாறு அணையை சுற்றுலா தலமாக்க ரூ.13.50 கோடியில் அரசுக்கு பரிந்துரை
வாணியாறு அணையை சுற்றுலா தலமாக்க ரூ.13.50 கோடியில் அரசுக்கு பரிந்துரை
ADDED : ஆக 31, 2025 03:54 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, சேர்வராயன் மலை அடிவாரத்தில் ஏற்காடு பின்புறம், வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை, 1985ல் கட்டப்பட்டது. ஏற்காடு மலை பகுதிகளில் மழை பெய்யும்போது, வாணியாறு அணை நிரம்புகிறது.
இதன் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் வட்டாரத்திலுள்ள, 10,517 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இதை சுற்றுலா தலமாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து
வருகிறது.
இதுகுறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதிகளை சுற்றி பார்க்க, ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். அப்பகுதியை சுற்றுலாத்தலமாக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' மூலம், இந்த அணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டப்பட்டுள்ளது.
அதன்படி, வாணியாறு அணையில் அனைத்து நவீன வசதிகளுடன், பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர் பூங்கா, விளையாட்டு மையம், நடைபாதைகள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், ஓய்வறைகள் அமைக்க, 13.50 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன் இங்கு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கும். இதனால், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதி வளர்ச்சி அடையும். பொதுமக்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

