/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சைபர் கிரைம் குற்றங்களில் ரூ.8.13 லட்சம் மீட்பு
/
சைபர் கிரைம் குற்றங்களில் ரூ.8.13 லட்சம் மீட்பு
ADDED : பிப் 28, 2024 02:42 AM
தர்மபுரி:தர்மபுரி,
சைபர் கிரைம் போலீசில் சமீப காலமாக பெருகி வரும், சைபர் குற்றங்கள்
தொடர்பாக, பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.
தர்மபுரி
மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் படி, தர்மபுரி மாவட்ட
சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டனர். இதில், மொத்தம், 8.13
லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. தொடர்ந்து, அப்பணம் உரியவர்களின்
வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டது.
தர்மபுரி எஸ்.பி.,
ஸ்டீபன் ஜேசுபாதம் பேசுகையில், ''இதுபோன்ற, பணமோசடி புகார்களுக்கு
உடனடியாக, 1930 என்ற சைபர்கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யுங்கள்.
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட விபரங்களை பகிரவேண்டாம். வேலை
வாய்ப்பு மற்றும் குறைந்த வட்டிக்கு அதிக லோன் தருவதாக வரும்
குறுஞ்செய்திகளை நம்பி, ஏமாற வேண்டாம். ஆன்லைன் லோன் அப்ளிகேஷன்களை-
இன்ஸ்டால் செய்ய வேண்டாம்,'' என அறிவுறுத்தினார்.

