/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி வேனில் சிக்கி குழந்தை பலி உறவினர்கள், பொதுமக்கள் மறியல்
/
பள்ளி வேனில் சிக்கி குழந்தை பலி உறவினர்கள், பொதுமக்கள் மறியல்
பள்ளி வேனில் சிக்கி குழந்தை பலி உறவினர்கள், பொதுமக்கள் மறியல்
பள்ளி வேனில் சிக்கி குழந்தை பலி உறவினர்கள், பொதுமக்கள் மறியல்
ADDED : ஆக 06, 2025 01:23 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே, தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலியானதால், உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டையை சேர்ந்தவர் ஜான்பாஷா. விவசாயி. இவருக்கு அல்பியா, 6, ஆஷியா, 3, என்ற இரு மகள்கள். தனியார் பள்ளியில் அல்பியா ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலை, 5:45 மணிக்கு, பள்ளி வேனில் அல்பியா வீடு திரும்பினார்.
அக்காவை பார்த்ததும், குழந்தை ஆஷியா ஓடினாள். அல்பியா பள்ளி வேனிலிருந்து இறங்கிய நிலையில், ஓடிச்சென்ற குழந்தை ஆஷியா, வேனின் முன்புற சக்கரம் அருகே சென்றார். இதை அறியாத டிரைவர், வேனை எடுத்ததில், முன் சக்கரத்தில் சிக்கி குழந்தை ஆஷியா சம்பவ இடத்திலேயே பலியானாள்.
ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள், வேனின் கண்ணாடிகளை உடைத்தனர். வேன் டிரைவரான குத்துக்கோட்டையை சேர்ந்த சுரேஷ், 45, தப்பியோடினார். தேன்கனிக்கோட்டை போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதற்கிடையே, டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குழந்தையின் உறவினர்கள், பொதுமக்கள் என, 500க்கும் மேற்பட்டோர், அஞ்செட்டி சாலையில், வனத்துறை சோதனைச்சாவடி அருகே நேற்றிரவு, 7:15 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பினர்.

