/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இ.பி.எஸ்., வருகைக்காக 7 பலுான்கள் பறக்க விடல்
/
இ.பி.எஸ்., வருகைக்காக 7 பலுான்கள் பறக்க விடல்
ADDED : ஆக 06, 2025 01:26 AM
கிருஷ்ணகிரி,:சட்டசபை தேர்தல், 2026ஐ முன்னிட்டு, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான இ.பி.எஸ்., வரும், 11ல் ஓசூர் மற்றும் சூளகிரியிலும், 12ல், கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் ஊத்தங்கரையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
பர்கூருக்கு வருகை தரும் இ.பி.எஸ்.,ஐ வரவேற்க, பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், தலா, 70,000 ரூபாய் மதிப்பிலான, 6 பலுான்களை, பர்கூர் நகரின் முக்கிய பகுதிகளில் அமைத்துள்ளார். இந்த பலுான்களை, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., நேற்று பறக்க விட்டார்.
இதில், ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், முன்னாள் கவுன்சிலர் சங்கர் மற்றும் சென்னகேசவன், அபிஷேக், வெங்கடேஷ், ராஜா, பெருமாள், பழனி, நாகராஜ், ரகு, நந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.