/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இடமாற்றம் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலகம் திறப்பு
/
இடமாற்றம் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலகம் திறப்பு
ADDED : டிச 02, 2025 02:44 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளி, இருதுக்கோட்டை, பெட்டமுகிலாளம், தடிக்கல், அனுமந்தபுரம் ஆகிய, 5 பஞ்.,ல் வசிக்கும் மக்கள், புதிய மின் இணைப்பு பெறுவது மற்றும் மின்கட்டணம் செலுத்துவது போன்ற பல்வேறு பணிகளுக்கு, தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள தெற்கு மின்பிரிவு அலுவலகத்திற்கு தான் வர வேண்டும். அதற்காக, 7 முதல், 25 கி.மீ., துாரம் மக்கள் பயணிக்க வேண்டியிருந்தது.
அதனால், தெற்கு பிரிவு அலுவலகம் சந்தனப்பள்ளி கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் கண்ணன், தேன்கனிக்கோட்டை செயற்பொறியாளர் பழனி, உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

