/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி முன் இருந்த புதர்கள் அகற்றம்
/
அங்கன்வாடி முன் இருந்த புதர்கள் அகற்றம்
ADDED : நவ 29, 2024 01:25 AM
அங்கன்வாடி முன் இருந்த புதர்கள் அகற்றம்
தர்மபுரி, நவ. 29-
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 25 குழந்தைகள் கல்வி பயில வந்து செல்கின்றனர். இந்நிலையில், நார்த்தம்பட்டி கிராமம் முழுவதும் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த அங்கன்வாடி மையம் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. மேலும், இக்கட்டடம் அருகே கழிவுநீர் தேங்கியுள்ளதால், கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இங்கு தேங்கும் கழிவுநீர் மற்றும் புதரில் இருந்து கொசு உள்ளிட்ட பூச்சிகள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, பஞ்., நிர்வாகம், அங்கன்வாடி மையத்தை சுற்றியிருந்த புதரை அகற்றினர். மேலும், கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

