/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாம்பாடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
/
மாம்பாடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
மாம்பாடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
மாம்பாடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
ADDED : நவ 20, 2024 01:48 AM
மாம்பாடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர
குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
அரூர், நவ. 20-
இலவச மின் இணைப்பு வழங்க, கம்பம் ஏற்றி வருவதற்கு பணம் வசூலிப்பதாக, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார். இதில், திருமலை, ராஜ்குமார், முருகன், வெங்கடேசன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், மொரப்பூர் இந்தியன் வங்கியில் பயிர்க்கடன் வழங்காமல் விவசாயிகள் அலைகழிக்கப்
படுகின்றனர்.
மாம்பாடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
இலவச மின் இணைப்பு வழங்க மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கம்பம் ஏற்றி வருவதற்கு வாடகை, கூலி மற்றும் கம்பி இழுத்து கட்ட என, விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. வரட்டாறு தடுப்பணை வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய்கள் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி
உள்ளது.
துார்வார பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பீணியாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். நில அளவீடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது, ஆர்.டி.ஓ., சின்னுசாமி, 'விவசாயிகளின் புகார் மற்றும் கோரிக்கைகள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தார்.

