/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோர்ட்டில் மொபைல் டவருக்கு கோரிக்கை
/
கோர்ட்டில் மொபைல் டவருக்கு கோரிக்கை
ADDED : செப் 09, 2025 02:33 AM
தர்மபுரி, விசுவ ஹிந்து பரிஷத், தர்மபுரி மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு, தர்மபுரி அருகே, தடங்கம் வனப்பகுதியையொட்டி, 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்நிலையில், தடங்கம் நீதிமன்ற வளாகத்தில், மொபைல் சிக்னல் குறைவாக உள்ளதால், இங்கிருந்து மொபைல் மூலம், மற்றவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. எனவே, நீதிமன்ற வளாகத்திற்கு புதிதாக மொபைல் டவர் அமைத்து கொடுக்க வேண்டும். பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் சார்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அங்கு வரும் வழக்குதாரர்கள் காத்திருக்க, இருக்கைகள் இல்லாததால், பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. எனவே, சார்பு நீதிமன்றங்களில் வழக்குதாரர்கள் அமர இருக்கைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார்.