/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பழைய ஓய்வூதியம் வழங்க ¼ïகோரிக்கை
/
பழைய ஓய்வூதியம் வழங்க ¼ïகோரிக்கை
ADDED : செப் 07, 2025 01:09 AM
நல்லம்பள்ளி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், நல்லம்பள்ளி வட்ட, 16-வது மாநாடு நல்லம்பள்ளியில் நேற்று நடந்தது.
ஒன்றிய தலைவர் மணிவேந்தன் தலைமை வகித்தார். நிர்வாகி ஜெயா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சுருளிநாதான் துவக்கி வைத்து பேசினார். இதில், அரசு துறைகளில் கொத்தடிமை கூலி முறைகளான தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், கான்ட்ராக்ட் பணி நியமன முறையை கைவிட்டு, நிரந்த பணியில் நியமிக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.