/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடியிருப்பு பகுதியில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை
/
குடியிருப்பு பகுதியில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை
குடியிருப்பு பகுதியில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை
குடியிருப்பு பகுதியில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை
ADDED : நவ 01, 2024 01:10 AM
குடியிருப்பு பகுதியில் தேங்கிய
குப்பையை அகற்ற கோரிக்கை
தர்மபுரி
தர்மபுரி, தடங்கம் பஞ்.,க்கு உட்பட்ட நந்தி நகரில், 6 தெருக்கள் உள்ளன. இங்கு பஞ்., நிர்வாகம் சார்பில் குப்பைதொட்டி வைக்காததால், குடியிருப்புவாசிகள் தெரு ஓரத்தில் குப்பையை கொட்டுகின்றனர். அவை காற்றில் பறந்து வீதி முழுவதும் பரவி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
மேலும் பலர், நந்திநகர் முதல்தெருவிலுள்ள காலி இடத்தில் குப்பையை கொட்டுகின்றனர். இது மலைபோல் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், பஞ்., நிர்வாகம் சார்பில், இந்த தெருவில் குப்பைதொட்டி வைக்கவோ அல்லது குப்பையை அள்ளவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.