/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கரும்பு கட்டிங் ஆர்டர் பட்டியல் ஒட்ட கோரிக்கை
/
கரும்பு கட்டிங் ஆர்டர் பட்டியல் ஒட்ட கோரிக்கை
ADDED : டிச 29, 2025 10:06 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை கடந்த டிச., 15ல் துவங்கியது. தற்போது, கரும்பு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்-நிலையில் கோட்ட அலுவலகங்களில், கரும்பு கட்டிங் ஆர்டர் பட்டியலை ஒட்ட, ஆலை நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவ-சாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
நடப்பு அரவைக்கு, 7,342.55 ஏக்கரில் பதிவு செய்-யப்பட்ட கரும்பு, 2.35 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டு, கரும்பு வெட்டும் பணி நடக்கிறது. இந்நிலையில் சீனி-யாரிட்டி அடிப்படையில், கரும்பு வெட்டும் வகையில், கரும்பு கோட்ட அலுவலங்களில், பதிவு மூப்பு அடிப்படையிலான, கட்டிங் ஆர்டர் பட்டியல் ஒட்ட வேண்டும். அதே போல், தோட்-டங்களுக்கு கரும்புகளை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்கள் மாமூல் பிரச்னையால் கரும்புகளை ஏற்றாமல் திரும்பிச் செல்லக்கூடாது. அவ்வாறு திரும்பிச் செல்லும் வாகனங்களில் மீண்டும் கரும்புகளை ஏற்ற அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

