/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உதயநிதி பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டுகோள்
/
உதயநிதி பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டுகோள்
உதயநிதி பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டுகோள்
உதயநிதி பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டுகோள்
ADDED : நவ 26, 2025 02:04 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க., இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதியின் பிறந்தநாள், நாளை நவ., 27 கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தை இளைஞர் எழுச்சி நாளாக மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, வார்டு கிளை கழகங்கள் சார்பாகவும், மாவட்ட சார்பு அணிகள் சார்பாகவும், மாவட்ட முழுவதும், தி.மு.க., கொடியை ஏற்றி இனிப்பு வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும் மற்றும் மருத்துவ முகாம்களும் நடத்த வேண்டும். விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.
நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள், ஓட்டுச்சாவடி குழு உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் விழாவை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

