/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி
/
தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 26, 2025 02:05 AM
தர்மபுரி, இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், 'மை பாரத்' தர்மபுரி இணைந்து, சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணியை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி முன், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தன
ர். இதில், கல்லுாரி மாணவியர், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 'மை பாரத்' தர்மபுரியின் துணை இயக்குனர் ட்ரவீன் சார்லஸ்டன் நிகழ்ச்சியின் விளக்கவுரை வழங்கினர். தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர் சாந்தி சர்தார் வல்லபாய் படேல் வாழ்க்கை குறித்த, விரிவான கருத்துக்களை வழங்கினார். இதில், தேசிய ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவியர் கையில் ஏந்தி சென்றனர்.

