/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்டில் மேற்கூரை அமைக்க கோரிக்கை
/
தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்டில் மேற்கூரை அமைக்க கோரிக்கை
தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்டில் மேற்கூரை அமைக்க கோரிக்கை
தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்டில் மேற்கூரை அமைக்க கோரிக்கை
ADDED : நவ 02, 2024 01:11 AM
அரூர், நவ. 2-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீது, பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராடுவதற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மலைகோவில் அடிவாரத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் மேற்கூரை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு பஸ், கார், டிராவல்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டர் விடப்படுகிறது. கடந்தாண்டு, 20.67 லட்சம் ரூபாய்க்கு சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் போனது. பல லட்சம் ரூபாய் வருமானம் வந்த போதிலும், சைக்கிள் ஸ்டாண்டில் மேற்கூரை வசதி இல்லாததால் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது. அதே போல், வாகனங்கள் திருட்டை தடுக்க,'சிசிடிவி' கேமரா வசதி இல்லை. மேலும், தரைத்தளம் முறையாக அமைக்கப்படாததுடன், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் இல்லை.
இது குறித்து பஞ்., நிர்வாகம் மற்றும் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வரும், 15ல் குத்தகை காலம் முடிவடைய உள்ளது. அதன் பின், நடப்பாண்டுக்கான, சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டர் விடப்பட உள்ளது. எனவே, மேற்கூரை, சிசிடிவி கேமரா, தரைத் தளம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்த பின், சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டர் விட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.