/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க கோரிக்கை
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க கோரிக்கை
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க கோரிக்கை
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க கோரிக்கை
ADDED : மார் 17, 2025 03:37 AM
அரூர்: தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்-வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்-தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தினமும், 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையை
சீரமைப்பதுடன், வழியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்லும் வகையில், கழிப்பறை வசதியுடன் சுடிய, ஓய்வு அறைகள் ஏற்படுத்த வேண்டும். அதேபோல், நீராடி விட்டு உடை மாற்ற வசதியாக அறைகள் அமைக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள், வயதான முதியோர் மற்றும் பக்-தர்கள் மலைக் கோவிலுக்கு செல்லும் வகையில், ரோப்கார் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவிக்க ஆவண செய்யப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி, தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.