/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
/
யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
ADDED : செப் 24, 2024 02:08 AM
தர்மபுரி: பாலக்கோடு அருகே, யானை தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழ்நாடு வன உயிர்கள் மோதல் தடுப்பு குழு உறுப்பினர் கந்தசாமி தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், மனி-தர்கள் மற்றும் வன விலங்குகள் இடையேயான மோதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் மூலம், பல்வேறு நடவடிக்கை எடுத்தும், இதுவரை உரிய தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், பாலக்கோடு அடுத்த, செங்கோ-டப்பட்டியை சேர்ந்த விவசாயி துரைசாமி நேற்று அதிகாலை, யானை தாக்கியதால் இறந்தார். இதில், வனத்துறையை கண்டித்து,
பொதுமக்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இறந்த விவசாயி குடும்பத்திற்கு தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார். வன உயிர்கள்
மோதல் தடுப்பு குழு நடவடிக்கை-களை விரிவுபடுத்தி, விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த வனத்துறையும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்
கூறினார்.

