/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேதமான அரசு பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்த வேண்டுகோள்
/
சேதமான அரசு பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்த வேண்டுகோள்
சேதமான அரசு பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்த வேண்டுகோள்
சேதமான அரசு பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்த வேண்டுகோள்
ADDED : மார் 17, 2025 03:38 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள, அரசு பள்ளி சுற்றுச்சுவரை அப்புறப்படுத்த வேண்டு-மென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பஞ்.,ல் ஊராட்சி ஒன்-றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 110 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்புக்காக, பள்ளி கட்ட-டத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதில், தரமற்ற பணியின் காரணமாக, சுற்றுச்சுவர் பல இடங்களில் விரிசல-டைந்து, சிமென்ட் கலவை பெயர்ந்து, செங்கல் மட்டும் உள்ளது. ஒரு மழை பெய்தாலே சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன், இடிந்து விழும் நிலையிலுள்ள சுற்றுச்சுவரை இடித்து
அப்புறப்படுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.