/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பேதாதம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட காந்தி நகரில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். காந்தி நகரை சேர்ந்த மக்கள் கலெக்டர் சதீஸ்யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், தாங்கள் ரேஷன் பொருட்களை வாங்க, 3 கி.மீ., துாரத்தில் உள்ள டி.புதுார் கிராமத்திற்கு சென்று வருவதால், மிகவும் சிரமப்படுகிறோம். எனவே, காந்தி நகர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.