/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
ADDED : டிச 16, 2025 06:14 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிசெட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட அஞ்சுகம் நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க, அருகில் உள்ள பாப்பி ரெட்டிப்பட்டிக்கு சென்று வருகின்றனர். அக்கடையில், 800க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அக்கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
மேலும், ரேஷன் பொருட்கள் வாங்கும்போது கூட்ட நெரிசலில் தள்ளு, முள்ளு ஏற்படுவதால் அவதிக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கும் அஞ்சுகம் கிராமமக்கள், இப்பிரச்னையை தீர்க்க தங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்

