/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அறுந்து விழுந்த கிரேன் ரோப் கிணற்றில் தவித்த 3 பேர் மீட்பு
/
அறுந்து விழுந்த கிரேன் ரோப் கிணற்றில் தவித்த 3 பேர் மீட்பு
அறுந்து விழுந்த கிரேன் ரோப் கிணற்றில் தவித்த 3 பேர் மீட்பு
அறுந்து விழுந்த கிரேன் ரோப் கிணற்றில் தவித்த 3 பேர் மீட்பு
ADDED : ஆக 12, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த வீரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சரவணன்.
இவரது, 75 அடி ஆழ விவசாய கிணற்றை துார்வாரும் பணியில், நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு மாம்பாடியை சேர்ந்த கனகு, 50, ராமு, 49, ரத்தினவேல், 60, ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது கிரேன் ரோப் அறுந்து விழுந்ததில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொட ர்ந்து, கிணற்றிலிருந்து மேலே வர முடியாமல், 3 பேரும் தவித்தனர். சம்பவ இடம் வந்த அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறை யினர், ஒரு மணி நேரம் போராடி, 3 பேரையும் பத்திரமாக கிணற்றிலிருந்து மீட்டனர்.