ADDED : ஜன 16, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் மற்றும் தமிழ் சங்கம் மற்றும் குறள்நெறி பேரவை ஆகியவற்றின் சார்பில், திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திலுள்ள, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், மற்றும் புலவர் பரமசிவம், தங்கம்மாள், சத்தியவேல் மற்றும் ராஜம்மாள் மற்றும் சங்க தலைவர் வடிவேல் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க உறுப்பினர்கள், மாநில அளவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற அறிவொளி, மேலும் குறள்நெறி பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

