/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
UPDATED : நவ 27, 2024 01:30 AM
ADDED : நவ 27, 2024 01:19 AM
கோரிக்கைகளை வலியுறுத்தி
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
கரூர், நவ. 27-
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
அதில், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை வெளியிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமன உச்ச வரம்பை, 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை நிரப்ப வேண்டும், துணை ஆட்சியர் பட்டியல், மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதேபோல், கரூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், நேற்று பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளரும், குளித்தலை தலைமையிடத்தில் துணை தாசில்தாருமான ஜெயவேல் காந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாசில்தார் இந்துமதி, தனிதாசில்தார் மகாமுனி, தலைமையிடத்து தாசில்தார் வைரபெருமாள், தனி
தாசில்தார் மதியழகன், டி.எஸ்.ஓ., நீதிராஜன் முன்னிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதேபோல், கடவூர் தாலுகா அலுவலகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
* தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் வளாகம் முன் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், வட்ட தலைவர் வித்தியாவதி தலைமை வகித்தார். கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.