/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

ADDED : நவ 28, 2024 12:57 AM
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்
2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
தர்மபுரி, நவ. 28-
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பணி புறக்கணித்து, 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது.
போராட்டத்தில், இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள, தேக்க நிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக, தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட தலைவர் கண்ணன், தர்மபுரி தாசில்தார் அலுவலகம் முன் வட்ட தலைவர் ரஞ்சித்குமார், அரூரில் இளையராஜா, பாப்பிரெட்டிபட்டியில் அருண், காரிமங்கலத்தில் ராஜ்குமார், பாலக்கோட்டில் செந்தில், பென்னாகரத்தில் ராஜா, நல்லம்பள்ளியில் மணி ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.