அரூர்: அரூர் பகுதியில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசா-யிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 4,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி நடவு செய்-யப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்-ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: அரூரில் கடந்த, மூன்று நாட்களுக்கு முன்பு வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 700 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, 900 ரூபாய்க்கு விற்பனை-யானது. தமிழகத்தில் அரூர், கம்பைநல்லுார், ஓசூர், ராயக்-கோட்டை, உடுமலைப்பேட்டை என, பல பகுதிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டிகளுக்கு வரும்,தக்காளியின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது.
அதேபோல், ஆந்திரா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக தக்-காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் சுபநி-கழ்ச்சிகளால், தக்காளி தேவை அதிகரித்துள்ளதுடன், வெளிமா-வட்டங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணமாகும். தக்காளி விலை உயர்ந்துள்-ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

