ADDED : மே 13, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர் :அரூர் பகுதியில் முடிவுற்ற சாலைப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி தலைமையில், உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
மொரப்பூர்-கல்லாவி சாலை ஒருவழித்தடத்திலிருந்து, இருவழித்தடமாக அகலப்படுத்துதல் பணியை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது தர்மபுரி கோட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜி மற்றும் கோட்ட பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.