ADDED : ஜூலை 21, 2025 04:03 AM
தர்மபுரி: தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். செயலாளர் சசிக்குமார் வரவேற்றார். நிர்வா-கிகள் பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உடனடியாக அமல்ப-டுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து, வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் அல்லது நிரந்தர
பயணப்படி வழங்க வேண்டும். மழைகோட், குளிர் பாதுகாப்பு ஆடை மற்றும் கையுறை போன்ற பாதுகாப்பு ஆடைகள், டார்ச்லைட் வழங்க வேண்டும். பதவி உயர்வில், 25 சதவிகிதத்தி-லிருந்து, 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். நெடுஞ்சாலை துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பன உள்-ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.