ADDED : ஜன 22, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டியிலுள்ள நெடுஞ்சாலையில், இருபுறமும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கலெக்டர் சாந்தி உத்தரவின்படி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவி பொறியாளர் ரஞ்சித்குமார் தலைமையில், பழைய பாப்பாரப்பட்டியிலிருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை, 3 கி.மீ., சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து அப்புறப்படுத்தினர். மேலும், சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடை, வீடுகள் கட்டுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.