/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சி; தப்பிய பணம்
/
தனியார் ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சி; தப்பிய பணம்
தனியார் ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சி; தப்பிய பணம்
தனியார் ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சி; தப்பிய பணம்
ADDED : ஆக 08, 2025 01:32 AM
அரூர், அரூர் அருகே, தனியார் ஏ.டி.எம்., மைய இயந்திரத்தை உடைத்து, பணத்தை எடுக்க நடந்த கொள்ளை முயற்சி தோல்வியால், இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எச்.ஈச்சம்பாடியில், அரூர் - திருப்பத்துார் செல்லும் பிரதான சாலையில், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், 'இந்தியா ஒன்' என்ற தனியார் ஏ.டி.எம்., மையம் உள்ளது.
இந்த மையத்தை, சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். நேற்று காலை ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கசென்றவர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தின் முன்பக்கம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அரூர் எஸ்.ஐ., உதயகுமார் விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் ரேடோ சிறிது துாரம் ஓடி விட்டு நின்றது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். விசாரணையில், நள்ளிரவில் ஏ.டி.எம்., மையத்திற்குள் பணம் எடுப்பது போல் நுழைந்த மர்ம நபர்கள், செங்கலால் ஏ.டி.எம்., இயந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்துள்ளனர். பின், அதிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல் திரும்பியதால், இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
ஏ.டி.எம்., இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் ஏ.டி.எம்., மையம் அமைந்துள்ள பகுதியிலுள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.